Friday, August 26, 2016

Ravathanallur Village, Uttiramerur Tk. - Samana Sirpam


அன்பிற்கினிய சமண சொந்தங்கள் அனைவருக்கும்......

உத்திரமேரூர் அருகே *இராவதநல்லூர்* கிராமத்தின் *தொடக்க பள்ளி எதிரே மிக பழைமையான தீர்த்தங்கர் சிலை உள்ளது*
இக்கிராமம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்த நிலையில், அசோக மரத்தோடு உள்ள இச்சிலையின் தலைக்கு மேல்புற முக்குடை சற்று உடைந்து காணப்படுகிறது. சிலையின் கீழ் பகுதியில் (லாஞ்சனம்) சிங்க முத்திரையும் சற்று சிதைந்து உள்ளது. தியானம் மேற்கொள்ளும் மகாவீரரின் இருபுறமும், சாமரம் வீசுவோர் காணப்படுகின்றனர். இச்சிலையை அங்குள்ள நற்பணி மன்றத்தினர் வழிபாடு செய்யாவிட்டாலும், பாதுகாத்து வருவதற்கு அடையாளமாக *மகாவீரர் சிலை என்று தெரியாமல்* புத்தர் சிலை என எண்ணி *புத்தர் நற்பணி மன்றம்*
என்ற பெயரில் நம் பகவான் இருப்பதை திரு.K.C. சின்னப்பா ஜெயின் மற்றும் நானும் (ராஜசேகரன்) அவ்வூர் மக்களிடம் கேட்டபோது சற்றே வருத்தம் ஏற்பட்டது .

மேலும் பேசும் போது பெரியவர் ஒருவர் இந்த ஊரின் பெயரே *இரவில் சாப்பிடாதவர்கள் வாழ்ந்த நல்ல ஊர்* மருவி நாளடைவில் *இராவத்த நல்லூர்*என மருவி விட்டது என கேட்டபோது சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

முந்தைய காலத்தில் சமண மக்கள், இப்பகுதியை சுற்றிலும் வாழ்ந்துள்ளதும்,
அதற்கு சான்றாகவே இச்சிலை இங்குள்ளதும்
தெரிய வந்துள்ளது. நம் முன்னோர்கள் வாழ்ந்த அவ்வூரில் உள்ள சிலையை பாதுகாக்க
இக்கிராம பொது மக்களின் ஆதரவுடன், சிலைக்கு மண்டபம் அமைத்து பாதுகாக்க ஆலோசித்து இன்று மாலை அவ்வூர் பெரியவர்களை அழைத்து பேச ஏற்பாடு செய்துள்ளோம்.

வர விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்
நன்றி
*இவண்*
*சமண இயக்கம்*
*9840596051*

No comments:

Post a Comment